செய்திகள்அரசியல்இலங்கை

இந்தியத் தூதுவருடன் தமிழ்த் தேசியக் கட்சிகளின் முக்கிய சந்திப்பு நாளை

Share
VideoCapture 20211102 110454
Share

தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும், இலங்கைக்கான இந்தியத் தூதுவருக்குமிடையில் நாளை கொழும்பில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கையளிப்பதற்காக, தமிழ் பேசும் தரப்புகளின் பொது நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் ஆவணம் இதன்போது கையளிக்கப்படவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் இச் சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.

அத்துடன், சமகால நிலைவரங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

அதேபோல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், இந்திய பிரதமரை சந்திப்பதற்கு இதன்போது, இந்திய தூதரக தரப்பால் கால எல்லை அறிவிக்கப்படலாம் என இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...