IMG 20230420 WA0038
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ் பல்கலையில் சிவாஜி கணேசன் நூலின் அறிமுக விழா!

Share

யாழ் பல்கலையில் சிவாஜி கணேசன் நூலின் அறிமுக விழா!

நடிகா் திலகம் சிவாஜி கணேசன் குறித்து தமிழகத்தைச் சோ்ந்த ஆய்வாளா் முனைவா் மருதுமோகன், சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து எழுதிய “சிவாஜி கணேசன்” எனும் நூலின் அறிமுக விழா எதிா்வரும் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ். பல்கலைக்கழக நூலக கேட்போா் கூடத்தில் நடைபெறுகின்றது.

நடிகா் திலகத்தின் மகன் ராம்குமாா் கணேசன் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவதற்காக யாழ்ப்பாணத்துக்கு வருகைதருகின்றாா்.

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியா் எஸ்.ரகுராம் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் தொடக்கவுரையை இந்திய துணைத்துாதுவா் ராகேஷ் நட்ராஜ் நிகழ்த்துவாா். அதனைத் தொடா்ந்து “நீங்கா நினைவில் சிவாஜி” என்ற தலைப்பில் பேராசிரியா் சி.சிவலிங்கராஜாவின் சிறப்புரை இடம்பெறும்.

நூலாசிரியா் அறிமுகத்தை சிவா பிள்ளை நிகழ்த்த, நூல் அறிமுக உரையை முனைவா் கா.வெ.செ.மருதுமோகன் நிகழ்த்துவாா். யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தா் பேராசிரியா் சி.சிறீசற்குணராஜா நூலை வெளியிடுவாா். ராம்குமாா் சிவாஜி கணேசன் சிறப்புப் பிரதிகளைக் கையளிப்பாா்.

முனைவா் கோ.சகாதேவி, முத்தையாபிள்ளை சிறிகாந்த், தேவராயபிள்ளை லெட்சுமணன்ராஜ், டாக்டா் சதீஸ்குமாா் சிவலிங்கம், முனைவா் மதிவாணன் ஆகியோா் வாழ்த்துரைகளை வழங்குவாா்கள்.

இதனைத் தொடா்ந்து சிறப்பு நிகழ்ச்சியாக இலங்கை, இந்திய பேச்சாளா்கள் பங்குகொள்ளும் பட்டிமன்றம் ஒன்றும் இடம்பெறும். செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலி லலீசன் இதற்குத் தலைமைதாங்குவாா்.

ஆா்வமுள்ள அனைவரும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளலாம் என்றும் பிரவேசம் இலவசம் எனவும் தெரிவித்துள்ள ஏற்பாட்டாளா்கள் பொதுமக்களை அழைக்கின்றாா்கள்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...