download 16 1 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தையிட்டியில் பெரும் பதற்ற நிலைமை!பொலிஸாாின் அடாவடித்தனம்!

Share

தையிட்டியில் பெரும் பதற்ற நிலைமை!பொலிஸாாின் அடாவடித்தனம்!

தையிட்டியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.நேற்று மாலை 3 மணியளவில்  தையிட்டியில் இடம்பெற்ற போராட்டத்தினை தொடர்ந்து போராட்டத்தில் முன்பக்கமாக உள்ள  தனியார் காணியில் கூடாரம் அமைத்து போராடிக்கொண்டிருந்தநிலையில் திடீடரென அங்குவந்த பொலிசார் இங்கு கூடாரம் அமைக்க கண்ணாடி உரிமையாளர்  அனுமதி உள்ளதா   என கேட்ட நிலையில் போராட்டகாரர்கள் அனுமதி பெற்ற இவ்வளவு பரப்பு காணியில் விகாரை அமைக்கப்பட்டது என பொலிசாரிடம் கேள்வி எழுப்பினர்.
உரிய காணி உரிமையாளரிடம் அனுமதி பெற்று வருகை தந்த நிலையில் பொலிசாரால் கூடாரம் கைப்பற்றப்பட்டு விகாரையில் முன்பாக இருந்த பொதுமக்கள் பலர் குறித்த பகுதியில் இருந்து அகற்றப்பட்டனர்.
இந்நிலையில் குறித்த விகாரையின் ஒழுங்கை முடக்கப்பட்ட நிலையில் செல்வராசாகஜேந்திரன்,சிரேஷ்ட சட்டத்தரணி காண்டீபன்  உட்பட நால்வர் முடக்கப்பட்ட நிலையில் ஆரம்பத்தில் பொலிஸ் ஜீப்ரக வாகனத்தினை குறுக்கே விட்டு நால்வரும் முடக்கப்பட்டனர்.
இதே நிலையில் குறித்த பகுதியில் பதற்ற சூழல் ஏற்பட்டது.வீதியால் சென்று வரும் பொதுமக்கள் அநாவசியமானமுறையில்பரிசோதனைக்
குட்படுத்தப்படடனர்.
சுமார் 9:30 மணியளவில் இருஉழவு இயந்திரங்களில் இரும்பு முள்வேலிகள் கொண்டுவரப்பட்டு  விகாரையில் இரண்டு பக்கமும்  முள்வேலிகள் இடப்பட்டு உள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் உள்ளிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட்ட நால்வர் இருக்கும் பகுதிக்கு செல்வதற்கு ஊடகவியலாளர்களிற்கு அனுமதி மறுக்கப்பட்டது.எதற்காக ஊடகவியலாளர்கள் செல்ல தடை விதிக்கின்றீர்கள் என வினவிய பொழுது  மேலிடத்திலிருந்து தமக்கு உத்தரவு வழங்கப்பட்டதாக தெரிவித்தனர்.
மேலும் நீதிமன்ற கட்டளை இன்றியே இவ்வாறு குறித்த பகுதியிலுள்ள செல்ல தடை விதிக்கப்பட்டது
ஊடகவியலாளர்களை தடுக்க பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் கதைக்க முனைந்த பொழுது லத்தியினை காட்டி பொலிசார் அச்சுறுத்தினர்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை சந்திக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடிப்பேச்சாளர் கனகரட்னம் சுகாஷ் வருகை தந்த பொழுது உள்ளே செல்ல பொலிசார் அனுமதி மறுத்த நிலையில் வாக்குவாதம் நிலவியது.
நீதிமன்ற கட்டளையை காட்டுமாறும் ஜனநாயகரீதியாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனை சந்திக்க  எனக்கு உரிமையுண்டு எனவும் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் கடமையிலிருந்து பொலிசார் வெளிநாட்டு பணம்பெறுவதற்காகவே இவர்கள் இப்படி செய்யகின்றார்கள் எனவும் சுகாஷினை நோக்கி குடித்துவிட்டா வருகை தந்துள்ளீர் என்று நாகரீகமற்றமுறையில் கேள்விகளை கேட்டனர்.
நான்குடித்துவிட்டு வருகை தந்திருந்தால் உடனடியாக பரிசோதனை செய்யவும் என பொலிசாருடன தர்க்கப்பட்டநிலையில் பாதுகாப்பு பலப்படுத்தபட்ட நிலையில் சுகாஷ் உட்பட்ட குழுவினரால் உள்ளே செல்லமுடியாத சூழல் ஏற்பட்டது.
இதனையடுத்து போராட்ட தலத்திற்கு செல்லமுடியாது தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பொதுமக்கள் உட்பட சிலர் முள்வேலி களுக்கு வெளியே வீதியில் தரித்துள்ளார்கள்.இராணுவ ,பொலிஸ் புலனாய்வாளர்கள் உட்பட பொலிஸ்பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.அதிகளவு தமிழ் பொலிசாரே கடமையில்  ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 12
சினிமாசெய்திகள்

ஷங்கர் – விக்ரம் சந்திப்பு..! கூட்டணி இணைய வாய்ப்புள்ளதா..?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியல் நல்ல...

17512685620
இலங்கைசெய்திகள்

அரசியலில் என்ட்ரியா..! ரஹ்மான் இணை அமைச்சரை சந்தித்ததன் பின்னணி என்ன..?

இந்திய சினிமாவின் இசைமேதை, இசையின் உலகநாயகர் ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் எல்....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 11
சினிமாசெய்திகள்

சினிமாவுக்கு வெளியேயும் தல சாம்பியன் தான்..! அஜித் ரேஸிங் அணிக்கு கிடைத்த வெற்றி மகுடம்..!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாது கார் ரேஸராகவும் மக்களை ஆச்சரியப்படுத்துபவர் தான் நடிகர் அஜித்...

17512832932
சினிமாசெய்திகள்

சினிமா துறையில் போதைப்பொருள் குறித்த பின்னணி!நேர்காணலில் பைல்வான் ரங்கநாதன் கருத்து!

தமிழ் சினிமா துறையில் இடம்பெற்றுள்ள போதைப்பொருள் தொடர்பான அண்மைய சம்பவங்கள், சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன....