3 48
இலங்கைசெய்திகள்

எமது ஆட்சியை கவிழ்க்கவே முடியாது : அநுர குமார சூளுரை

Share

எமது ஆட்சியை கவிழ்க்கவே முடியாது : அநுர குமார சூளுரை

“அறுகம்குடா(arugambay) சம்பவத்தை அடிப்படையாக வைத்தேனும் இந்த ஆட்சியைக் கவிழ்க்க முடியுமா என எதிரணிகள் சிந்தித்துக் கொண்டுள்ளன. அவ்வளவு எளி தில் இந்த ஆட்சியைக் கவிழ்த்து விட முடியாது. நாட்டை மீட்டெடுக்கும் வரை எம்மை வீழ்த்த முடி யாது.”

 

இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayake) தெரிவித்தார். களுத்துறையில் (kalutara)நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரை யாற்றும் போதே அவர் மேற் கண்டவாறு கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

 

“ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்று ஆட்சியமைத் தால் டொலரின் பெறுமதி 400 ரூபா வரை செல்லும் என பிரச்சாரம் செய்தனர். இன்று அவ்வாறு நடந்துள்ளதா? இல்லை. எமது பிரதிநிதிகள் சர்வதேச நாணய நிதித்துடன் பேச்சு நடத்தி வருகின்றனர். சாதகமான பிரதிபலன் கிட்டியுள்ளது. மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

 

எமது ஆட்சியில் அஸ்வெசும இல்லாமல் செய்யப்படும் என்றனர். அதுவும் நடக்கவில்லை. அன்று கூறிய அனைத் தும் பொய்யென உறுதியாகியுள்ளது. எனவே, பொய்களை நம்பி எவரேனும் ஏமாந்திருந்தால் அவர்களும் இன்று உண்மையை உணர்ந்திருப்பார்கள்.

 

எனவே, எமக்கு நாடாளுமன்றத் தில் பெரும்பான்மையை மக்கள் வழங்குவார்கள். இதனால் சிலர் குழம்பிப் போயுள்ளனர். ஏதேனும் சிறு சம்பவம் நடந்தால்கூட ஆட்சி கவிழுமா என எதிர் பார்த்துக்கொண்டுள்ளனர்.

 

அறுகம்குடா சம்பவம் தொடர்பில் அனைவரும் ஊடக சந்திப்புகளை நடத்துகின்றனர். அதன் மூலமாகவேனும் ஆட்சி கவிழுமா என்ற சந்தோசத்தில் அவர்கள் உள்ளனர்.

 

மூன்று வாரங்களுக்கு முன்னரே எமக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து சுற்றுலாத்துறையும் பாதிக்காத வகையில் திட்டமிட்ட அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்கும் அதேவேளை திட்டமிட்டவர்களையும் கைது செய்வதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்று, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.” என்றார்.

Share
தொடர்புடையது
preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...

Pillayan
இலங்கை

இன்றைய தினம் பிள்ளையானுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்...

Ranil Namal
இலங்கை

ரணிலுடன் நாமல் பேசியது என்ன?

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ராஜபக்ச தரப்பினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன. இந்த நடவடிக்கைகளுக்கு,...

Fire Breaks
இலங்கை

களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீ – துண்டிக்கப்பட்ட மின்சாரம்.

  களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீப்பரவல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று காலை சுமார் 8.30...