அடுப்பில் நெருப்பு எரியவில்லை: மக்களின் மனதில் தான் எரிகிறது!!

Sajith 1

நாட்டில் தற்போது அடுப்பில் நெருப்பு எரிவதற்குப் பதிலாக, மக்களின் மனதில் நெருப்பு எரிகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நத்தார் தினத்திற்கு முன்பு எரிபொருள் விலையை அதிகரித்து சிறந்த கிறிஸ்மஸ் பரிசை அரசு வழங்கியுள்ளது.

அதேபோல புத்தாண்டுப் பரிசாக தற்போது கையிருப்பிலுள்ள டொலர்களையும் செலவு செய்து கடன் தவனையை அரசாங்கம் செலுத்தவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நமக்கள் குறையை கேட்டறியும்’மனிதாபிமான சுற்றுலா’வின் இரண்டாவது விஜயத்தை நேற்று (27) அம்பலாந்தொட்டையில் ஆரம்பித்து மக்களை சந்தித்து பேசி குறைகளை கேட்டறிந்ததுடன் “குடும்ப ஆட்சியே நாட்டின் அழிவு” என்ற துண்டு பிரசுரத்தையும் வழங்கினார்.

மத்திய வங்கி ஆளுநர் டொலர் மாபியாவின் வஞ்சகர். மக்களோடும், ஏற்றுமதியாளர்களோடும் விளையாடிக்கொண்டிருக்கிறார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்த நபரொருவர் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக சுட்டிக்காட்டிய சஜித் பிரேமதாஸ ,மொட்டு பொருளாதார சீரழிவின் பிரதான சூத்திரதாரி என்றும் கூறினார்.

#SrilankaNews

Exit mobile version