sajith 5
அரசியல்இலங்கைசெய்திகள்

மக்கள் வாழ்வை அழித்த யானை, காகம், மொட்டு அரசை விரட்டியடிக்க வேண்டும்!

Share

இதற்கு முன்னர் தான் கணித்தபடி மீண்டும் மின் கட்டணம் அதிகரித்துள்ளதாகவும்,மின் கட்டணம் 75 சதவீதத்தால் அதிகரிக்கும் என தான் கணித்திருந்தாலும், அது 250 சதவீதத்தால் அதிகரிக்கப் போகிறது எனவும், இதனால் அனைத்து தொழிற்சாலைகளும் அனைத்து வர்த்தகர்களும் ஆதரவற்ற நிலைக்கு ஆளாகியுள்ளனர் எனவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

கம்பளை நகரில் நேற்று (15) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

பொருட்களின் விலையை அதிகரிப்பது, வரிச்சுமையை அதிகரிப்பது, உரங்களின் விலையை அதிகரிப்பது போன்றனவற்றைச் செய்யவே இந்த அரசாங்கத்திற்கு தெரியும். எனவே விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் வாழ்வை அழித்த யானை, காகம், மொட்டு அரசை நாம் விரட்டியடிக்க வேண்டும்.

அதேபோல், ஒரு குறிப்பிட்ட குழுவினர் தம்மால் நன்றாக செய்ய முடியும் என்று நாடு முழுவதும் இருமாப்பு பேசி வருகின்றனர். 2019 ஆம் ஆண்டு நன்றாகச் செய்வதாகக் கூறி வந்தவர் முழு நாட்டையும் அழித்துள்ளார். எனவே, அவர்களும் ஒன்றே இவர்களும் ஒன்றே எனக்கூறித் திரியும் அந்த சிவப்பு நிற சோசலிஸவாதிகள்,71 மற்றும் 88 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வீடுகள் எரிக்கப்பட்டு,மக்கள் கொல்லப்பட்டு,உத்தரவுகள் மூலம் நாட்டை ஆண்ட காலத்தை நாம் மறந்துவிடக் கூடாது.

திருடர்களைப் பிடிப்பதாகக் கூறும் சிவப்பு சகோதரர்கள், 2005 ஆம் ஆண்டு ராஜபக்சர்களை ஆட்சிக்கு கொண்டு வந்ததில் இருந்து அவர்கள் பிடிக்கப்போகும் திருடர்கள் ஒருவருமில்லை. எனவே, 2019 ஆம் ஆண்டு போன்று மீண்டும் ஏமாறக்கூடாது. அவ்வாறு செய்தால் நாடு அழிவின் விளிம்புக்குச் செல்வதை தடுக்க முடியாது போகும் – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...