” வானுயர கோபுரம் அமைக்கப்பட்ட நாட்டில், பட்டினியால் பிள்ளைகள் மயங்கி விழுகின்றனர். முறையற்ற அபிவிருத்தி நடவடிக்கைகளால் உலகம் முழுதும் கையேந்த வேண்டிய நிலையில் நாடு உள்ளது. எனவே, ஆட்சியாளர்களுக்கு பதிலளிப்பதற்கு உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.”
இவ்வாறு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டில் நடுத்தர வர்க்கத்தினர் – மத்திய வருமானம் பெறுபவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டவர்களும் தற்போது வறுமையின் பிடிக்குள் சிக்கியுள்ளனர்.
பாரிய பெருந்தெருக்கல் அமைக்கப்பட்டன. வானுயர கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டது. ஆனால் விமானம் வருவதில்லை. நாட்டு மக்களுக்கு ஒருவேளை உணவுகூட பெரும் சவாலாக மாறியுள்ளது.
சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக நத்தார் காலத்தில் கொழும்பை சொர்க்க புரியாக்க போகின்றார்களாம். ஆனால் நாட்டு மக்களுக்கு உண்பதற்கு உணவு இல்லை. அறநெறி பாடசாலைக்கு வரும் மாணவர்கள் மயங்கி விழுகின்றனர். உலகம் முழுவதும் கையேந்தப்படுகின்றது. எனவே, போலி நடவடிக்கைகள் வேண்டாம்.
அதேவேளை, உள்ளாட்சி சபைத் தேர்தல் அடுத்த வருடம் மார்ச் மாதம் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். அரசியல் அழுத்தங்களுக்கு பணிந்து தேர்தலை பிற்போட வேண்டாம் என தேர்தல் ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொள்கின்றோம். தேர்தல் என்பது எமக்கான உரிமை. அரசாங்கத்துக்கு பதிலளிக்க வாய்ப்பு வேண்டும்.” – என்றார்.
#SriLankaNews
                    
                            
                                
				            
				            
				            
				            
 
 
 
 
Leave a comment