wedding scaled
இலங்கைசெய்திகள்

அச்சுவேலி – மணமக்களுக்கு எதிராக வழக்கு!

Share

அச்சுவேலி வடக்கில் இன்று இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் சுகாதார விதிமுறைகளை மீறி நிகழ்வு நடைபெற்றுள்ளது என பொலிஸாரால் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன் திருமண நிகழ்வில் பங்கேற்றோரை அங்கிருந்து அனுப்பிவிட்டு மணமக்கள் உள்ளிட்ட சிலரிடம் கொரோனாத் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் 100 க்கும் மேற்பட்டோர் பங்குபற்றியுள்ளனர் என பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்து, அத் திருமண நிகழ்வுக்கு சென்ற பொலிஸார் விருந்தினரை வெளியேறுமாறு பணித்து மணமக்களுக்கும் அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கும் கொரோனாத் தொற்று சோதனை மேற்கொள்ள பணித்துள்ளனர்.

அத்துடன் சுகாதார விதிமுறைகளை மீறி திருமண நிகழ்வை ஒழுங்கு செய்தவர்கள் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 15 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அச்சுவேலி பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...

Untitled 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்திய ஓட்டுநர் கைது: சாரதி அனுமதிப்பத்திரமும் இல்லை!

சமூக ஊடகங்களில் வைரலாகிய காணொளி காட்சிகளின் அடிப்படையில், வீதி சமிக்ஞைகள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு படுகொலை: கொலையாளிகளுக்கு கடும் தண்டனை கோரி பாரிய மக்கள் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற அதிர்ச்சியை ஏற்படுத்திய கொள்ளை மற்றும் கொடூரக் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய...