அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தினால் பொது மக்கள் பாரிய இன்னலுக்குள் தள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திலேயே அவர் இது இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டில் நிலவும் காலநிலை, உரம் மற்றும் களைநாசினி தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் மரக்கறிகள் மற்றும் ஏனைய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் பொது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரசாங்கமோ அல்லது எதிர்க்கட்சியோ எவரும் புறக்கணிக்க முடியாது.
வர்த்தமானிகளை வெளியிடுவதன் மூலம் மாத்திரம் தீர்வுகளை வழங்க முடியாது.
பல நிறுவனங்கள் விலையை நிர்வகிக்கக்கூடிய மட்டத்தில் பராமரிப்பதற்கு பொறுப்பாக இருப்பதாகவும், எனவே அத்தகைய பிரிவுகள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுமாறு அழைப்பு விடுத்துள்ளது.
பொறுப்பான நபர்களுடன் கலந்துரையாடி அத்தகைய தீர்மானங்கள் எடுக்கப்படாததால் பல வர்த்தமானிகளை வெளியிட்டு பின்னர் இரத்து செய்யப்பட்டது.
நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளை மதிப்பீடு செய்து, மக்களின் சுமையை குறைக்க பொருத்தமான பொருளாதார மாதிரியை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment