chavakachchiri 1
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஊர்திப் பவனிக்கு இராணுவம் இடையூறு!

Share

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழினம் கொத்துக் கொத்தாகக் கொன்றழிக்கப்பட்டதை அடையாளப்படுத்தி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்பட்டு வருவதோடு 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் முற்றத்திலே மாபெரும் நினைவேந்தல் நிகழ்வுகளும் இடம்பெறுவது வழக்கம்.

இதன் ஒரு அங்கமாக தாயக நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கோரியும் இனப்படுகொலையை இளஞ்சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும்  முல்லைத்தீவில் இருந்து முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை  நினைவு படங்கள் தாங்கிய ஊர்திப் பவனியானது கடந்த 12 ம் திகதி தொடங்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்த காலப் பகுதியில் கடுமையான ஷெல் தாக்குதல்கள் மற்றும் விமானத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களால் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கொல்லப்பட்ட கப்பலடிப் பகுதியிலிருந்து   தொடங்கிய இந்த ஊர்திப் பவனியானது வவுனியா சென்று  மன்னார் சென்று அங்கிருந்து வெள்ளாங்குளம்  ஊடாக மல்லாவி நகரை அடைந்து மாங்குளம் கிளிநொச்சி பூநகரி சாவகச்சேரி ஊடாக யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளது

குறித்த ஊர்தியின் நான்காம் நாள் பயணம் இன்று காலை இரணைமடு சந்தியிலிருந்து ஆரம்பித்து கிளிநொச்சி சேவைச்சந்தையில் அஞ்சலிக்காக நிறுத்தப்பட்டு அங்கு அதிகளவான மக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

அதனை தொடந்து குறித்த ஊர்தி சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டபோது அங்கு இராணுவத்தால்  இடையூறு ஏற்படுத்தபட்டிருந்தது

குறித்த ஊர்தி சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டபோது அங்கு வந்த  சிறிலங்கா இராணுவத்தினர் இடையூறு வழங்கியுள்ளனர்.

இராணுவ அதிகாரி ஊர்தி தொடர்பில் கேள்வி எழுப்பிய நிலையில்  அங்கு  குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது

இதனை தொடந்து ஊர்தி பவனி யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது இன்றைய தினம் (16) யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர் .

chavakachchiri 1 1

 

chavakachchiri 9 Copy

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...