1 67
இலங்கைசெய்திகள்

வாகன இலக்கத் தகடுகள் குறித்து திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

Share

வாகன இலக்கத் தகடுகள் குறித்து திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தொடர்பான சிக்கல் நிலை தீர்க்கப்பட்டு மீள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வாகனத்தின் இலக்கத் தகடுகளை பெறுவதற்கு பணம் செலுத்தி இன்னும் அதைப் பெறவில்லையென்றால், 2024 டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன் இலக்கத் தகடுகளைப் பெற்றுக் கொள்ளுமாறு திணைக்களம் கோரியுள்ளது.

டிசம்பர் 15 இற்கு பின்னர், தற்காலிக இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி வீதிகளில் வாகனங்கள் ஓட்ட முடியாது எனவும் தற்காலிக இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தும் வாகனங்கள் மீது பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுப்பர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்காலிக இலக்கத் தகடுகளுடன் வாகனம் ஓட்டுவதற்கு இதுவரை வழங்கப்பட்ட அனுமதி, இந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி அன்று இரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...

bike accident 1
இலங்கை

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி.

நேற்றைய தினம், சிலாபம் – ஆனமடுவை வீதியில் 5ஆம் கட்டைப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்...

oil price 14 2
இலங்கை

மீண்டும் அதிகரிக்கிறதா எரிபொருள் விலை ?

இன்று நள்ளிரவு முதல், மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக எரிபொருள் விலையில் உலக சந்தையில்...