Parliament SL 2 1 1000x600 1
அரசியல்இலங்கைசெய்திகள்

தொழில்நுட்பம், முதலீடு – அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று

Share

தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு மேம்பாடு அமைச்சு உட்பட இரு புதிய அமைச்சு பதவிகளை நிறுவுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு, தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு மேம்பாடு அமைச்சு ஆகியனவே இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளன.

தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு மேம்பாடு அமைச்சு பதவி தம்மிக்க பெரேராவிடம் கையளிக்கப்படும் என தெரியவருகின்றது. பஸில் ராஜபக்சவின் இடத்துக்கு இவர் நியமிக்கப்படவுள்ளார்.

தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு மேம்பாடு அமைச்சின்கீழ், ஸ்ரீலங்கா டெலிகொம், தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, தேசிய முதலீட்டுச் சபை, ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு குடியகல்வு திணைக்களம், துறைமுகநகர் பொருளாதார திணைக்களம், தரக்கட்டளை நிறுவகம், மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவகம் (ICTA), தாமரை கோபுரம், கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகம் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...