இன்று சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
எரிபொருள் இன்மையால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
அத்துடன் பொதுமக்களின் கருத்துக்கு அரசு மதிப்பளிக்காது தன்னிச்சையான தீர்மானங்களை எடுத்து வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேலும் குறிப்பிட்டார்.
Leave a comment