mahinda 1
அரசியல்இலங்கைசெய்திகள்

எந்நேரமும் எதுவும் நடக்கலாம்! – மஹிந்த பரபரப்புக் கருத்து

Share

“இலங்கை அரசியலில் எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது.”

– இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று தெரிவித்தார்.

தற்போதைய அரசியல் நெருக்கடிக்குத் தான் பொறுப்பு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, அரசுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்க வேண்டிய நிலைமைக்குத் தான் காரணம் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட ராஜபக்ச அரசு கூண்டோடு பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி நாடெங்கும் மக்கள் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. அதனிடையே பிரதமர் மஹிந்த ராஜபக்ச உடன் பதவி விலகி சர்வகட்சி அடங்கிய இடைக்கால அரசு அமைய வழிவிட வேண்டும் என்ற முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும எம்.பியின் கோரிக்கையும் ஆளும் கட்சிக்குள் பெரும் புயலாக மாறியுள்ளது.

இந்நிலையில், பிரதமர் பதவியில் தான் தொடர்ந்து நீடிப்பார் என்றும், இடைக்கால அரசு அமைந்தால்கூட அதுவும் தனது தலைமையிலேயே மலரும் என்றும் நேற்று திட்டவட்டமாக அறிவித்திருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இன்று “இலங்கை அரசியலில் எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது” என்று கூறி திடீரென தனது பாணியை மாற்றியுள்ளார்.

கொழும்புச் செய்தியாளர் ஒருவருக்கு இன்று வழங்கிய குறுகிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எனக்குப் பதவி ஆசை அல்ல. ஆனால், என்னைக் குறிவைத்து சிலர் ஏன் பதவி விலகக் கோருகின்றனர் என்று எனக்குப் புரியவில்லை. எனினும், அவர்களின் குறுகிய கால சுயலாப அரசியல் எனக்குப் புரிகின்றது.

இலங்கை அரசியலில் எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. எனினும், தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு நான் பொறுப்பு அல்ல. அரசுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்க வேண்டிய நிலைமைக்கும் நான் காரணம் அல்ல.

மக்களின் துயரங்களை நான் புரிந்துகொள்கின்றேன். எப்போதும் மக்கள் பக்கமே நான் நிற்பேன். மக்களின் மனநிலையை அறிந்துதான் ஒவ்வொருகட்ட நடவடிக்கையையும் நான் எடுத்து வருகின்றேன்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...