4SpFPz8TjWpL63l6dINw 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் ஆசிரியரால் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை!

Share

யாழ்ப்பாணம், வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பெண்கள் பாடசாலையில் உயர்தர வகுப்பில் கற்பிக்கும் ஆசிரியர் மாணவிகள் சிலரை பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் அதிபரிடம் முறையிட்ட மாணவி பாடசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல் நிலையத்தில் நேற்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உயர்தர வகுப்பில் வர்த்தகப்பிரிவில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரே மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

பெற்றோரும் அதிபரிடம் இந்த விடயம் சம்பந்தமாக முறையிட்டுள்ளனர். இதனையடுத்து மாணவியை வேறு பாடசாலைக்கு மாற்றுவதென்றால் மாற்றுங்கள் என்று பெற்றோரிடம் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து தரம் ஒன்றிலிருந்து குறித்த பாடசாலையில் கற்ற மாணவி, அதே வலயத்திலுள்ள வேறு பாடசாலையில் இணைந்துள்ளார்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...