இந்தியாஇலங்கைசெய்திகள்

தமிழக மீனவர்கள் கைது! – இலங்கை அரசின் நன்றி மறந்த செயல்

Share
1723388 anbumaniramadoss
Share

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு அனைத்து வகையான உதவிகளையும் இந்தியா தான் செய்து வருகிறது. ஆனாலும், அவற்றையெல்லாம் மறந்து விட்டு, தமிழ் மீனவர்களை சிங்களப் படை கைது செய்வதை இந்தியா வேடிக்கை பார்க்கக்கூடாது.

இவ்வாறு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இலங்கையின் வடக்கு கடல் பகுதியில் எல்லை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள அன்புமணி ராமதாஸ்,

நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன் தினம் வங்கக்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்களில் ஒரு படகில் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்த 12 மீனவர்களை கைது செய்த சிங்களக் கடற்படையினர், காரைக்கால் மீனவர்கள் எல்லை தாண்டி வந்து நெடுந்தீவு அருகில் மீன் பிடித்ததாகக் கூறி சிறையில் அடைத்து உள்ளனர்.

மீனவர்களை இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து கைது செய்த சிங்களப் படையின் செயல் கண்டிக்கத்தக்கது.

தமிழக, காரைக்கால் மீனவர்கள் மீதான சிங்களக் கடற்படையினரின் தாக்குதல் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டும் என்பது தான் இலங்கை அரசின் நோக்கம் ஆகும்.

அதனால் தான், தமிழக மீனவர்களை கைது செய்வது, அவர்களின் படகுகளை பறிமுதல் செய்து அழிப்பது உள்ளிட்ட செயல்களில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது. கைது செய்யப்பட்டுள்ள காரைக்கால் மீனவர்கள் 12 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய மாநில அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக, காரைக்கால் மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். அதற்காக தமிழக-இலங்கை மீனவர்களுக்கிடையிலான பேச்சுகளை மீண்டும் தொடங்கவும் வகை செய்ய வேண்டும் – என்றுள்ளார்.

#IndiaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...