26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

Share

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S. Shritharan) தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் பகுதியில் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இடங்கள் இன்று சிங்கள குடியேற்றங்களுக்கான இடமாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

அண்மைய நாட்களில் சம்பந்தன் ஐயா தலைமையில் பல பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால் நாங்கள் இன்னும் முன்னேற முடியாத நிலையிலே உள்ளோம்.

நாங்கள் ஒப்பந்தங்களால் ஏமாற்றப்பட்டோம் ரணில் பிரபா ஒப்பந்தம் இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் தீர்வு கிடைக்கும் என நினைத்தோம் எல்லாமே எங்களுக்கு முன்னால் இல்லாமல் போனது.

மேலும் தெரிவிக்கயைில், காலம் காலமாக சிங்கள தலைவர்களால் ஏமாற்றப்பட்டோம்.

அறவழிப்போராட்டங்கள் தோற்கடிக்கப்பட்ட போதே எமது இளைஞர் ஆயுதத்தை எடுத்தனர். குறிப்பாக, எங்களுடைய இறைமையை மீட்டெடுக்க போராடுகின்றோம்.

கடந்த 10ஆண்டுகளாக சம்பந்தன் தலைமையில் பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதும் நாம் ஒரு சாண் கூட முன்னேற முடியவில்லை.

28ஆம் திகதி வர்த்தமானி வெளிவந்திருக்கிறது. அரசு உரிமை கோராத காணிகளை சுவீகரிக்க முனைகிறது. இதில் சிங்கள குடியேற்றத்தை நிறுவ நினைக்கின்றனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் பலர் காணியின்றி உள்ளனர்.

பிமல் ரத்நாயக்கா கேட்கின்றார் உப்பின் பெயர் வேணுமா சுவை வேணுமா என்று எங்களுடைய மண்ணுக்குரிய பெயரை மாற்ற முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...