34
சினிமா

கமல் படத்தை பார்க்க புர்கா அணிந்து சென்ற நடிகை ஸ்ரீதேவி.. எந்த படம் தெரியுமா?

Share

இந்திய சினிமா கொண்டாடிய பிரபலமான நாயகிகளில் ஒருவர் தான் நடிகை ஸ்ரீதேவி.

தமிழ் சினிமா ரசிகர்களால் என்றும் மறக்கவே முடியாத நாயகியாக வலம் வந்த இவர் சில வருடங்களுக்கு முன் துபாயில் உறவினர் திருமணத்திற்கு சென்றவர் உயிரிழந்தார். திரைப்படம் டிக்கெட் முன்பதிவு

தற்போது அவரது மகள்கள் ஜான்விகபூர் மற்றும் குஷி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்து ஜொலிக்க தொடங்கியுள்ளனர்.

முன்னணி நாயகியாக இருந்த ஸ்ரீதேவி, கமல்ஹாசனின் ஒரு படத்தை காண புர்கா அணிந்து வந்து திரையரங்கில் படம் பார்த்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2000ம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கி, நடித்த படம் ஹேராம், அப்போது மக்களின் பெரிய கவனத்தை பெற்ற இப்படத்தை சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் காண ஸ்ரீதேவி மிகவும் ஆசைப்பட்டாராம்.

இதனால் சென்னையில் உள்ள சத்யம் சினிமாஸ் திரையரங்கில் படம் பார்க்க புர்கா அணிந்து வந்து படத்தை பார்த்தாராம். படத்தை பார்த்து முடித்துவிட்டு கமல்ஹாசனுக்கு போன் செய்து படம் குறித்தும் பெருமையாக பேசியிருக்கிறார்.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...