jaffna jail
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழக மீனவர்கள் யாழ். சிறைக்கு மாற்றம்!

Share

காரைநகர் கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 23 தமிழக மீனவர்களை யாழ்ப்பணம் சிறைக்கு மாற்ற பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 11ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 23 மீனவர்களையும் அவர்களது இரண்டு படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைதுசெய்து காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்க வைத்திருந்தனர்.

இதனிடையே நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த பருத்துத்துறை நீதவான் மீனவர்கள் அனைவரது விளக்கமறியலையும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் கடற்படை முகாமில் உள்ள மீனவர்கள் 23 பேரையும் யாழ்ப்பாணம் சிறைக்கு மாற்றக் கோரி யாழ். மாவட்ட நீரியல்வளத்துறை அதிகாரிகள் மனு அளித்திருந்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி மீனவர்கள் 23 பேரையும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மேலும் இந்த வழக்கில் ஆஜரான இந்தியத் துணைத் தூதரக அலுவலக சட்டத்தரணி மீனவர்கள் 23 பேரையும் தூதரக அதிகாரிகள் நேரில் சந்தித்து தமிழகத்தில் உள்ள மீனவர்களின் உறவினர்களிடம் தொலைபேசி வாயிலாக பேச ஏற்பாடு செய்ய வேண்டும், மீனவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தூதர அதிகாரிகள் வழங்க அனுமதிக்க வேண்டும் என நீதிபதியிடம் கோரிக்கைவிடுத்தார்.

அதற்கு பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி வரும் 1ஆம் திகதி மீனவர்களை இந்திய துணை தூதரகம் சார்பில் யார் நேரில் சந்திக்கிறார்கள் என்ற விவரத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்கும்படி உத்தரவிட்டார்.

#SriLankanews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி முகத்திடலில் பரபரப்பு: மின்கம்பத்தில் ஏறி நபர் ஒருவர் போராட்டம்!

கொழும்பு, காலி முகத்திடல் (Galle Face) வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர்...

AP26015371678237 1000x689 1
செய்திகள்உலகம்

விண்வெளி வீரருக்குத் தீவிர உடல்நலக் குறைவு: அவசரமாகப் பூமிக்குத் திரும்பியது SpaceX விண்கலம்!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) தங்கியிருந்த விண்வெளி வீரர் ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் மற்றும் தீவிர...

images 10 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதை ஒழிப்பு: மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் குருநாகலில் புதிய ஒரு நாள் சிகிச்சை நிலையங்கள்!

இலங்கையில் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் வகையில், மூன்று புதிய ஒரு நாள் (Day...

Cover image 2
செய்திகள்உலகம்

தொப்புள்கொடியை வெட்டும்போது நேர்ந்த கொடூரம்: பச்சிளம் குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம்!

சீனாவின் ஜியாங்சு (Jiangsu) மாகாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில், பிறந்து சில நிமிடங்களே ஆன பச்சிளம்...