kajen
இலங்கைசெய்திகள்

கைதிகளை பார்வையிட தமிழ் எம்.பிக்களுக்கு அனுமதி மறுப்பு!

Share

கைதிகளை பார்வையிட தமிழ் எம்.பிக்களுக்கு அனுமதி மறுப்பு!

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட நேற்று சென்ற காலை சட்டத்தரணிகள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கஜேந்திரன் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

அநுராதபுரம் சிறைச்சாலை கைதிகளுக்கு இராஜாங்க அமைச்சரால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பில் பல கண்டனங்கள் வெளியிடப்பட்டு வந்தன.

இந்த நிலையில் அநுராதபுர சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளை பார்வையிட சென்ற தமிழ் எம்.பிக்களுக்கு சிறை அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்று அதிகரித்து வரும் நிலையில் சிறைக்குள் செல்ல அனுமதிக்க முடியாது. சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சிடம் அனுமதி பெற்று அறிவித்தல் கிடைத்தால் மாத்திரமே அனுமதிப்போம் என சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் சிறையில் உள்ளவர்களின் நலன்களை பார்வையிட சட்டத்தரணி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எங்களை அனுமதிக்கச் சொல்லி வேண்டினோம்.

ஆனால் அவர் அனுமதிக்கவில்லை. நாங்கள் தொடர்ந்தும் முயற்சிகளை எடுப்போம் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...