சிங்கள எம்.பி இன் மூக்கை உடைத்த தமிழ் நீதிபதி!
இலங்கைசெய்திகள்

சிங்கள எம்.பி இன் மூக்கை உடைத்த தமிழ் நீதிபதி!

Share

சிங்கள எம்.பி இன் மூக்கை உடைத்த தமிழ் நீதிபதி!

முல்லைத்தீவு – குருந்தூர்மலையில், மேலதிகமாக மேம்படுத்தல் வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றதா, என்பது தொடர்பில் ஆராய்வதற்காக முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா நேற்றைய தினம் களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது குருந்தூர்மலைப் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகரவும் வருகைதந்திருந்தார்.

இதன்போது நீதிபதி ரி.சரவணராஜா, குருந்தூர் மலை வழக்குத் தொடர்பிலான விசாரணைகளை இரு தரப்பு சட்டத்தரணிகளுடனும் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது இடையே குறுக்கிட்ட சரத்வீரசேகர, தன்னை அறிமுகப்படுத்தி தானும் அங்கு கருத்துத் தெரிவிக்க முற்பட்டார்.

எனினும் அவரது கருத்தினை ஏற்க மறுத்த நீதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர்களோ, அரசியல்வாதிகளோ இங்கு கருத்துத் தெரிவிக்கமுடியாதென கூறினார்.

அதோடு , இங்கு நீதிமன்ற விசாரணையே இடம்பெறுவதாகவும், அங்கிருந்து சரத் வீரசேகரவினை விலகிச் செல்லுமாறும் எச்சரித்த நிலையில் சரத் வீரசேகர அங்கிருந்து விலகிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...