Gajendrakumar
செய்திகள்இலங்கை

குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்துங்கள் ! – மனித உரிமைகள் பேரவைக்கு த.தே.ம.மு. கடிதம்

Share

குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்துங்கள் ! – மனித உரிமைகள் பேரவைக்கு த.தே.ம.மு. கடிதம்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமது கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 13 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கையெப்பமிட்டு அனுப்பியுள்ள குறித்த கடிதத்தில்,

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 கீழ் 1 தீர்மானத்தின் மூலம் எமது மக்களுக்கு நீதி கிடைக்காது. எனவே பேரவையில் பொறுப்புக்கூறல் விடயம் இருக்கும்வரை மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியும் அரசியல் தீர்வும் தாமதமாகும்.

இவற்றை கருத்தில் கொண்டு, இந்த விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும் – கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கையொப்பமிட்ட கடிதம் ஒன்றும் ஜெனீவாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அத்துடன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் இரண்டு அடங்கலாக ஐந்து கட்சிகள் இணைந்து, மற்றுமொரு கடிதத்தை ஏற்கனவே ஜெனீவாவுக்கு அனுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...