கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸார் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது 4 பொலிஸார் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தருமபுரம் கல்மடு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
மணல் வியாபாரிகளுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் வன்முறைச் சம்பவம் இடம்பெறுகிறது என அவசர சேவை இலக்கமான 119 இற்கு அந்தப் பகுதி மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கு வந்த விசேட பொலிஸ் பிரிவினர் மீதே இவ்வாறு வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இரு வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளார்.
Leave a comment