வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் ஒருவர் (வயது-24) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்றுமுன்தினம் 11.30 மணியளவில் கல்வியங்காடு பகுதியில் புடவை வியாபாரத்தில் ஈடுபடும் இளம் வர்த்தகர் மீது நல்லூர் சட்டநாதர் ஆலயத்துக்கு முன்பாக வாள்வெட்டு நடத்திய குற்றச்சாட்டிலேயே குறித்த நபர் கைதாகியுள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த வர்த்தகர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.
கைதான நபர் மீது கொக்குவில் மற்றும் மானிப்பாய் பகுதிகளில் வன்முறைகளில் ஈடுபட்ட நிலையில் நீதிமன்றங்களில் ஏற்கனவே குற்றச்சாட்டுகள் உள்ளன.
ஆரம்ப கட்ட விசாரணைகளின்படி, காசுக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் உள்ள முரண்பாடு காரணமாக இந்த வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றது என தெரிவிக்கப்படுகிறது. குறித்த தாக்குதலில் இருவர் தொடர்புபட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான நபர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#SriLankaNews
Leave a comment