ஐக்கிய அரபு இராச்சியத்தின் ப்ளெய் டுபாய் நிறுவனம் இலங்கைக்கான அனைத்து விமானப் பயணங்களையும் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
இலங்கையில் நிலவும் நெருக்கடி நிலைமை காரணமாக ஜூலை 10 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை டுபாய் மற்றும் இலங்கைக்கான விமானப்பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின பேச்சாளர் தெரிவித்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இதேவேளை, இரத்துச் செய்யப்பட்டுள்ள விமானப் பயணங்களின் விமானப் பயணச் சீட்டுக்களுக்கான பணம் மீண்டும் பயணிகளுக்கு வழங்கப்படவுள்ளது எனவும் அந்த நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
#SriLankaNews
 
 
 
                     
                             
                                 
				             
				             
				             
				             
 
 
 
 
 
 
 
Leave a comment