நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படபோவதாக அறிவிப்பு விடுத்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கும் ஆளுங்கட்சி வலை விரித்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்க முடிவு செய்த அணி அண்மையில் நடத்திய பேச்சில் சுசில் பிரேமஜயந்த பங்கேற்ற போதிலும் அதன் பின்னர் நடைபெற்ற சந்திப்புகளில் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையிலேயே அவரை வளைத்துப்போடும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது எனக் கூறப்படுகின்றது.
சுசில் பிரேமஜயந்த பச்சைக்கொடி காட்டினால், எதிர்வரும் 18ஆம் திகதி பதவியேற்கவுள்ள அமைச்சரவையில் அவர் இடம்பெறுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அரசின் செயற்பாடுகளை விமர்சித்ததால், இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment