இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்தவை, கட்சியில் இருந்தும் தூக்குவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகிவருகின்றது.
அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும், அடுத்தக்கட்ட நகர்வுகள் சம்பந்தமாக ஆராய்வதற்கும் மொட்டு கட்சியின் மத்திய செயற்குழு கூடவுள்ளது.
” சுசில் பிரேமஜயந்தவை கட்சியில் இருந்து நீக்குமாறு பெரும்பாலான உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.” – என்று தகவலை மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் வெளியிட்டுள்ளார்.
அரசை கடுமையாக விமர்சித்ததால், இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நேற்று முன்தினம் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews
Leave a comment