ranil 2
அரசியல்இலங்கைசெய்திகள்

ஆட்சி மாற்ற போராட்டத்துக்கு ஆதரவு வழங்குங்கள்! – ரணில் வேண்டுகோள்

Share

நாட்டில் தற்போதுள்ள அரசியல் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக இளைஞர்கள் முன்னெடுக்கும் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குமாறு இலங்கை இளைஞர் சமூகத்திடம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டிலுள்ள இளைஞர்கள் குழுவுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள இளைஞர்களும் சமூக ஊடக ஆர்வலர்களும் தற்போதுள்ள அரசியல் அமைப்பை மாற்றும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்த முன்னாள் பிரதமர், இது அரசியல் அல்லது வேறு சக்திகளின் கீழ் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில், அரசியல்வாதிகள் தலையிட்டு போராட்டத்தைக் கெடுக்க வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலின்போது, இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டத்தில் அரசியல் ரீதியில் கலந்துகொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படும் இளைஞர்கள், முன்னாள் பிரதமர் ரணிலுக்கு அழுத்தம் பிரயோகித்துள்ளனர்.

இளைஞர்கள் – யுவதிகள் சுயாதீனமாக ஆரம்பித்துள்ள இந்தப் போராட்டத்தில் அரசியல்வாதிகள் தலையிடக்கூடாது என்று ரணில் குறிப்பிட்டுள்ளார்.

அதற்குப் பதிலாக அரசியல் சிந்தனைகளை அகற்றி, நாட்டின் இளைஞர்களாக இணைந்து போராட்டத்தில் ஈடுபடுமாறு கட்சியுடன் இணைந்த அனைத்து இளைஞர் குழுக்களுக்கும் முன்னாள் பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...