ஜே.வி.பிக்கான ஆதரவலை மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் நிலையில், கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களும், இராஜதந்திரிகளும் அது தொடர்பில் கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில் முக்கியமான நாடுகளின் தூதுவர்கள் சிலர் விரைவில் ஜே.வி.பியும் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்தியை சந்திக்கவுள்ளனர் எனவும், அடுத்த வருட ஆரம்பத்தில் சந்திப்பு நடைபெறும் எனவும் நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
வழமையாக கியூபா நாட்டு தூதுவர் உட்பட மேலும் சில தூதுவர்கள் ஜே.வி.பியுடன் சந்திப்புகளை நடத்துவது வழமை.
ஆனால் இம்முறை பலம்பொருந்தி – இலங்கை அரசியலில் செல்வாக்கு செலுத்தும் நாடுகளின் தூதுவர்களை ஜே.வி.பியினரை சந்திப்பதுதான் முக்கியத்துவம் மிக்கதாக கருதப்படுகின்றது.
இதற்கிடையில் தெற்கு அரசியலில் பிரதான இரு பாரம்பரியக் கட்சிகளுள் ஒன்றாக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி , ஜே.வி.பியுடன் சங்கமிப்பதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளமையும் தெற்கு அரசியலில் திருப்பு முனையாக பார்க்கப்படுகின்றது.
#SrilankaNews