தமிழரசுக் கட்சி என்ன நிலைப்பாட்டில் உள்ளது. இந்தியாவுக்கு ஒருமுகம், தென்னிலங்கைக்கு ஒருமுகம், சர்வதேசத்திற்கு ஒரு முகம், தமிழ் மக்களுக்கு ஒருமுகத்தை காட்டுவதற்கு தமிழரசுக்கட்சி முயற்சி செய்துகொண்டிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
வல்வெட்டித்துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா தொடர்பாக கேள்வியெழுப்பியபோதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா ஏற்பாடுகளை கூட நான் தொடர்பு கொண்டு தற்போதைய சூழ்நிலை நடத்த வேண்டாம் என கூறியுள்ளேன்.
அதனையும் மீறி நிகழ்வை நடத்த முற்படுவார்களாக இருந்தால் வல்வெட்டித்துறை நகரசபை இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆலோசனை வழங்கியுள்ளோம்.
அவர்களுக்கு நாங்கள் பக்கபலமாக இருப்பதுடன் தேவைப்பட்டால் நீதிமன்றம் மூலமாக இதனை தடுக்க முற்படுவோம்.
சிலர் கூறுவார்கள் பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவதைப்போல என்று, ஆனால் இங்கு சுமந்திரனின் நடவடிக்கையானது தொட்டிலையும் ஆட்டிக்கொண்டு பிள்ளையையும் கிள்ளிவிடுவது போன்ற செயற்பாடாக உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

