நாட்டில் தற்போது பொருட்களின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, உணவின் சில்லறை விலை 15 வீதத்தினால் அதிகரித்ததுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது டிசம்பர் 2020 உடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, உணவின் விலை 37 % ஆல் உயர்வடைந்துள்ளது எனவே கூறப்பட்டுள்ளது.
உணவின் சில்லறை விலையை மாதாந்தம் கண்காணிக்கும் BCI என்ற Advocata நிறுவகத்தின் “பாத் கரி இன்டிகேட்டர்” இவ்விடயத்தினைத் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், 100 கிராம் பச்சை மிளகாய் 18 ரூபாவில் இருந்து 71 ரூபாயாக உயர்வடைந்துள்ளது. குறிப்பாக ஒரு மாதத்தில் 287 % அதிகரிப்பு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கத்தரிக்காய் 51 வீதமாகவும், சிவப்பு வெங்காயம் 40 வீதமாகவும், போஞ்சி மற்றும் தக்காளி விலை 10 வீதமாகவும் உயர்வடைந்துள்ளன.
#SrilankaNews