பாடசாலை மாணவர்களின் துவிச்சக்கர வண்டிகளை தொடர்ச்சியாக திருடி வந்த ஒருவர் கைது யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேக நபரிடமிருந்து 10 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
பருத்தித்துறை – சுப்பர்மடத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே கைதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 20 துவிச்சக்கர வண்டிகள் திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன என சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
திருடப்பட்ட துவிச்சக்கர வண்டிகளில் 10 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஏனையவை தேடப்பட்டு வருகின்றன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#SriLankaNews
Leave a comment