நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வுகாணக் கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழக பெரும்பான்மை மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தற்போது இடம்பெற்று வருகிறது.
பெரும்பான்மை மாநபர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டத்தில் தற்போது தமிழ், முஸ்லீம் மாணவர்களும் ஒன்று திரண்டுள்ளனர்.
இன்று காலை 8.30 மணியளவில் பல்கலை முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் பலாலி வீதியூடாக யாழ் வைத்தியசாலை வீதியை சென்றடைந்துள்ளது.
அரசுக்கெதிரான வாசகங்களை தங்கியவாறும், கோஷங்களை எழுபபியவாறும் இடம்பெறும் போராட்டம் யாழ். பேருந்து தரிப்பிடத்தை நோக்கி நகர்ந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment