இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் மகன் (வயது – 23) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் ராகம மருத்துவபீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர் கைதாகியுள்ளார்.
அவர் தானாக முன்வந்து பொலிஸாரிடம் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பயன்படுத்தினார் என கூறப்படும் ஜீப் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதான அவர் இன்றையதினம் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகள் பலகோணங்களில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews
Leave a comment