பாடசாலை சீருடையில் பியர் அருந்திய 5 பாடசாலை மாணவர்கள், பாணந்துறை கடற்கரையில் இன்று (22) பிற்பகல் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது பிடிபட்டுள்ளனர் என்று பாணந்துறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாணந்துறையில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்விகற்கும் 16 மற்றும் 15 வயதுடைய மாணவர்களைக் கொண்ட குழுவொன்றே பிடிபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தவணைப் பரீட்சை முடிவடைந்த பின்னர், பியர் கேன்களை கொள்வனவு செய்துள்ள அவர்கள், கடற்கரையில் வைத்து பியர் அருந்தியுள்ளனர்.
பெற்றோரிடம் அறிவுரை வழங்கி மாணவர்களை ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
#SriLankaNews
Leave a comment