Parliament SL 2 1 1000x600 1
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலுக்கு வலுக்கும் போட்டி!

Share

புதிய ஜனாதிபதி பதவிக்காக நாடாளுமன்றத்தில் ஐமுனை போட்டி நிலவுகின்றது.

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் அநுரயாப்பா அபேவர்தன ஆகியோருக்கு இடையில் இந்த மோதல் உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் ஐவரும் ஜனாதிபதி வேட்பாளராக எம்.பி.க்களை வெற்றிபெறச் செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பல முக்கியஸ்தர்கள் தலையிட்டு ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிக்க அக்கட்சியில் இணைந்துள்ள இரண்டு அமைச்சர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.க்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள முனைப்பு காட்டி வருவதாக தெரியவந்துள்ளது.

பொதுஜன பெரமுனவின் பலமான ஒருவர், அக்கட்சி உறுப்பினர்களை அழைத்து ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக நியமிக்க கட்சியின் முக்கியஸ்தர்கள் தீவிரம் காட்டி வருவதாகவும், அவருக்கு ஆதரவளிக்க அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான குழுவும் தயாராகி வருவதாக சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, டலஸ் அழகப்பெருமவை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களை வெற்றிகொள்ளும் நடவடிக்கை மொட்டு கட்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுடன், ஒன்பது கூட்டுக் கட்சிகளின் குழுவும் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்க தயாராகி வருவதாக அறியமுடிகின்றது.

இந்நிலைமையை கருத்திற் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பி குழுவும் மூன்று அணிகளாக பிளவுபட்டுள்ளன.

அக்கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கும், மேலும் சிலர் சஜித் பிரேமதாசவிற்கும், மேலும் சிலர் டலஸ் அழகப்பெருமிற்கும் ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில் உள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...