மீண்டும் பணிப்புறக்கணிப்பில் தொடருந்து நிலைய அதிபர்கள்!!

Train 1

தொடருந்து நிலைய அதிபர்கள் இன்று (14) மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் உபதலைவரை பதவியிலிருந்து நீக்குவதற்கு தொடருந்து திணைக்கள பொதுமுகாமையாளர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆரம்பித்திருந்த 24 மணிநேர தொழிற்சங்க நடவடிக்கை நேற்று நள்ளிரவு நிறைவடைந்தது.

இந்த நடவடிக்கை காரணமாக பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தும் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டிருந்தனர். இந்நிலையில் தொடருந்து நிலைய அதிபர்கள் மீண்டும் அவசர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Exit mobile version