தமிழ்நாடு – தருமபுரி மாவட்டம் நாகாவதி அணை முகாமைச் சேர்ந்த ஈழத்தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர், மோட்டார் வண்டியில் பயணித்தபோது எதிரே வந்த வாகனத்தை கண்டு பிரேக் போட்ட நிலையில், மோட்டார் வண்டியிலிருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இவர் தலைக்கவசம் (ஹெல்மட்) அணியாமல் மோட்டார் வண்டியில் பயணித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் உயிரிழந்தவர் இலங்கையிலிருந்து இந்தியா சென்று அகதி முகாமில் வசித்து வரும் அருண்குமார் (26) என்பவராவார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு பின் நாளை நல்லடக்கம் செய்யப்படஉள்ளது. இச் சம்பவம் நாகாவதி முகாம் மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவர் உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார் எனவும், இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருந்தது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
#India
Leave a comment