கல்வி அமைச்சு பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு

Share

கல்வி அமைச்சு பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு

கல்வி அமைச்சினால் வழங்கப்படும் இடமாற்றங்களுக்கு அமைய பணிபுரியாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடமாற்ற உத்தரவு தொடர்பில் ஆசிரியர்களுக்கு பல தடவைகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதனைப் பொருட்படுத்தாமல் அவர்கள் முன்பு இருந்த அதே பாடசாலைகளில் பணியாற்றுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும் சேவையின் தேவை கருதி சில ஆசிரியர்களை தற்போதுள்ள பாடசாலைகளில் பணிபுரிய அனுமதிக்குமாறு அதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அவ்வாறான ஆசிரியர்களுக்கு இந்த தீர்மானம் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேவைக்கதிகமான ஆசிரியர்களைக் கொண்ட பாடசாலைகளில் இருந்து பற்றாக்குறை உள்ள பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிக்கும் வேலைத்திட்டம் உள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் நடைமுறைபடுத்தப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
sl pass port
இலங்கை

போலியான கடவுச்சீட்டு – பிரித்தானியாவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்!

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்றைய தினம் நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போது, முன்னாள் நாடாளுமன்ற...

arested
இலங்கை

மெகசின் சிறைச்சாலைக்கு அருகில் கைதான நபர்கள் – விசாரணையில் வெளியான அதிர்ச்சித்தகவல்கள்!

இன்று பிற்பகல், மெகசின் சிறைச்சாலையின் பக்கவாட்டுச் சுவருக்கு அருகே நடத்தப்பட்ட சோதனையின் போது கைதிகளுக்கு போதைப்பொருள்...

Srilankan Airlines
இலங்கை

மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது குவைத்திற்கான விமான சேவை.

இன்று பிற்பகல் முதல், கொழும்புக்கும் குவைத்திற்கும் இடையிலான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

tf
இலங்கை

அனுமதி பத்திரமின்றி இயங்கிய டின் மீன் தயாரிப்பு நிறுவனம் முற்றுகை .

பன்னல, எலபடகம பகுதியில், இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் (SLSI) செல்லுபடியாகும் உரிமம் இன்றி இயங்கி வந்த...