25 6848196dc63ce
இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் தொடர்பான அறிவிப்பு குறித்து வெளியாகியுள்ள தகவல்

Share

2025ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சாரக் கட்டண திருத்தம் இந்த வார இறுதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை மின்சார சபை முன்வைத்த முன்மொழிவு தொடர்பாக பொது மக்களின் கருத்துக்களை பெற்ற பின், அதன் மீளாய்வு நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 2025ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்காக இலங்கை மின்சார சபை முன்வைத்த மின்சாரக் கட்டண திருத்த முன்மொழிவு, அதாவது 18.3% உயர்வு முன்மொழிவு தொடர்பாக பொதுமக்கள் ஆலோசனை செயல்முறை நடைபெற்றது.

அந்த ஆலோசனை செயல்முறையின் போது பொதுமக்களால் வழங்கப்பட்ட எழுத்து மற்றும் வாய்மொழி கருத்துக்கள், முன்மொழிவுகள் ஆய்வு செய்யப்பட்டு, அது இறுதிக் கட்டத்தில் உள்ளது. அத்துடன், முன்மொழிவு கட்டண முறைமையுடனான இணக்கத்தன்மை குறித்த மீளாய்வு நடவடிக்கைகளும் இறுதிக் கட்டத்தில் உள்ளன.

எனவே, பெரும்பாலும் இந்த வாரத்திற்குள், அடுத்த பாதிக்கு செயல்படுத்தப்படவுள்ள மின்சாரக் கட்டணங்கள் எவை, அவை எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்த இறுதி முடிவை அறிவிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த வாரத்திற்குள் பெரும்பாலும் இதன் இறுதி முடிவை அறிவிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
death body
இலங்கை

கருங்குளவிக்கொட்டுக்கு இலக்கான முதியவர் மரணம்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 10ஆம் வட்டாரம், பகுதியினை சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் என்ற 67 வயதான...

mervin silva031
இலங்கை

வங்கி கணக்குகளில் மட்டும் இத்தனை கோடிகளா – மேர்வின் சில்வாவினால் இன்னும் பலருக்கு தலைவலி!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள 600...

fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...