பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தை இலங்கை வன்மையாகக் கண்டித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (04) விசேட அறிவிப்பொன்றை விடுத்த சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன,
“பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலையில் முகாமையாளராக பணிபுரிந்த இலங்கையர் ஒருவர், அடிப்படைவாதிகளால் கொல்லப்பட்டுள்ளார். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இச்சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, நீதியை வழங்குவதற்கு பாகிஸ்தான் பிரதமர் தலையிட்டுள்ளார். இதனை நாம் மதிக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இச்சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் வலியுறுத்தியுள்ளது.
மேலும் இக்கொடூர சம்பவத்தை வன்மையாக தமது கட்சி கண்டிக்கிறது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று (04) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அத்துடன், இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், இனியும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதையும் பாகிஸ்தானில் உள்ள இலங்கைத் தூதுரகம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
Leave a comment