24 662731b5e4940
இலங்கைசெய்திகள்

இலங்கையில் இளம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்ய முயன்ற வெளிநாட்டு பிரஜை

Share

இலங்கையில் இளம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்ய முயன்ற வெளிநாட்டு பிரஜை

இலங்கையில் இளம் பெண் ஒருவரை திருமணம் செய்ய முயன்ற இந்திய பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி (Kandy) – வத்தேகம பகுதியை சேர்ந்த ஆசிரியையாக பணியாற்றும் இளம் பெண்ணை திருமணம் செய்ய முயன்ற 26 வயதான இளைஞனை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த இளைஞன் தன்னை ஊடகவியலாளராகவும் மற்றும் திரைப்பட நடிகராகவும் அறிமுகம் செய்துள்ளார். குறித்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற இளைஞன், திருமணம் செய்ய விரும்பம் தெரிவித்துள்ளனார். எனினும் பெண்ணின் பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

எனினும் குறித்த இளைஞன் விசா முடிவடைந்த நிலையில் இலங்கையில் தங்கியிருந்து, பெண்ணின் பெற்றோருக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

இது தொடர்பில் வத்தேகம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

வத்தேகம பிரதேசத்திற்கு செல்வதற்காக கண்டி மணிக்கூட்டு கோபுர பேருந்து நிலையத்தில் தயாராக நின்ற போது, குறித்த இந்திய பிரஜை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இந்திய பிரஜையை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த கண்டி சுற்றுலா பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்திய பிரஜையை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான நீதிமன்ற உத்தரவை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...