tamilni 149 scaled
இலங்கைசெய்திகள்

கிரிக்கெட் மீதான தடையை நீக்க முயற்சி

Share

கிரிக்கெட் மீதான தடையை நீக்க முயற்சி

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட் சபை மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மீதான தடையை நீக்குவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட், மிகவும் ஊழல் நிறைந்த நிறுவனம் என்பதை நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஏற்றுக்கொள்கிறார்கள் என இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், இதனை தேசிய பிரச்சினையாக கருதி இலங்கை கிரிக்கெட் சபையில் ஊழலை இல்லாதொழிக்கும் நோக்கில் நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சிகளும் எதிர்கட்சி உறுப்பினர்களும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளதாக கூறியுள்ளார்.

இது அரசியல் தலையீடு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி டி சில்வாவின் வேண்டுகோளுக்கு இணங்க சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கையில் கிரிக்கெட்டுக்கு தடை விதித்ததாக “கிரிக்இன்போ” இணையத்தளம் உட்பட பல சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், கிரிக்கெட் தலைவர் இவ்வாறான கோரிக்கையை விடுத்திருந்தால் அது நாட்டுக்கு செய்யும் துரோகமாகும் எனவும், அதற்கு பொறுப்பான அமைச்சர் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ரணதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...