இலங்கை
இலங்கை கிரிக்கெட்டுக்கு அதிர்ச்சி கொடுத்த ஐ.சி.சி
இலங்கை கிரிக்கெட்டுக்கு அதிர்ச்சி கொடுத்த ஐ.சி.சி
சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு இலங்கை அணிக்கு இன்று ( 10) முதல் தடை விதிக்கப்படுவதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”ஒரு நிர்வாகத்தின் செயல்பாடுகளில் அந்நாட்டின் அரசு அல்லது அரசியல்வாதிகள் அல்லது அரசாங்க நடவடிக்கைகள் தலையிடக்கூடாது என்பது ஐசிசியின் முக்கியமான விதிமுறையாகும். ஆனால் அதை இலங்கை அரசு மீறி இலங்கை வாரியத்தை கலைத்து தலையிட்டதால் இந்த தடை விதிக்கப்படுகிறது” என கூறியுள்ளது.
மேலும் ”இலங்கை அரசு தலையீடுகள் இல்லாமல் இலங்கை வாரியம் சுதந்திரமாக செயல்படும் வரை இந்த தடை நீடிக்கும்” என்றும் ஐசிசி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை தடை செய்ய சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று கூடிய நிலையில், இலங்கை கிரிக்கெட் ஒரு உறுப்பினர் என்ற வகையில் அதன் கடமைகளை கடுமையாக மீறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, இலங்கையில் கிரிக்கெட் விவகாரங்களை தன்னாட்சி முறையில் நிர்வகிக்க வேண்டும் மற்றும் நிர்வாகம், ஒழுங்குமுறை மற்றும் நிர்வாகத்தில் அரசாங்கத்தின் தலையீடு இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற இந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைநீக்கத்தின் நிபந்தனைகள் சர்வதேச கிரிக்கெட் பேரவையால் சரியான நேரத்தில் முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக கிரிக்கெட் நிறுவனத்திற்குள் பல்வேறு மோடிகள் இடம்பெறுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.
சமகால நிர்வாக சபையை முழுமையாக கலைத்து புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.