image de14f1c4ae
இலங்கைசெய்திகள்

அந்தமானில் தத்தளிக்கும் இலங்கை மீனவர்கள்!!

Share

மட்டக்களப்பு – கல்குடா பிரதேசத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் இயந்திரக் கோளாறு காரணமாக கடலில் தத்தளித்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இலங்கை திரும்ப முடியாமல் அந்தமான் தீவுக் கூட்டங்களில்  தத்தளிக்கின்றார்கள்.

அவர்களை மீட்டெடுக்குமாறு சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட்டிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அந்தமான் தீவில் தத்தளிக்கும் கல்குடா மீனவர்கள் தொடர்பான விடயம் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

மீனவர்களான ஏ.எம். முஹாஜித் (வயது 34), எம்.எச்.எம். றிஸ்வி(வயது 35), பி.எம். இர்ஷாத்  (வயது 33) எம். அஸ்வர் (வயது 29) ஆகியோர்   மீன் பிடிக்கான அனுமதி பெற்றுக் கொண்டு கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதி வாழைச்சேனையிலிருந்து வங்காளக் கடலுக்கு மீன்பிடிக்காக புறப்பட்டனர்.

எனினும், வழமையாக மீன் பிடியில் ஈடுபட்டு திரும்பும்   காலத்தையும் தாண்டி அவர்கள் கரை திரும்பாததால் நாம் அவர்களைத் தேடத் துவங்கினோம்.

அப்பொழுதுதான் அவர்கள் சென்ற படகின் இயந்திரம் செயலிழந்த நிலையில் அந்தமான் தீவில் சிக்கித் தத்தளிப்பது தெரியவந்தது.

இந்தியக் கரையோரக் காவல் துறையினர் அவர்களைக் காப்பாற்றி கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து இலங்கை கடற்றொழில் அமைச்சு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, இந்தியத் தூதரகம் உள்ளிட்ட இன்னும் பல இடங்களுக்கும் அறிவித்து அவர்களை மீட்டுத் தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

ஆயினும், இப்பொழுது ஆறுமாதங்கள் கடந்துள்ள நிலையிலும் அவர்களை மீட்பதற்கான எந்த வித முயற்சிகளும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சுற்றாடல் அமைச்சருமான தங்களிடம் இந்த விடயத்தைச் சமர்பிக்கின்றோம் என்று மக்கள் அமைச்சரிடம் குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர் நஸீர் அஹமட்,

இந்த விடயத்திற்கு முன்னுரிமை அளித்து அந்தமான் தீவில் சிக்கித் தவிக்கும் கல்குடா மீனவர்களை மீட்டெடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...