இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் அன்டனி பிளிங்கன் ஆகியோர் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.
இலங்கையின் நெருக்கடி நிலைமை மற்றும் க்ரைனுக்கு எதிரான ரஷ்ய ஆக்கிரமிப்பின் தாக்கங்கள் குறித்தே குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது என பிளின்கன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கம்போடியாவில் உள்ள புனோம் பென் நகரில் அமெரிக்க – ஆசியான் அமைச்சர்கள் கிழக்கு ஆசிய உச்சி மாநாடு வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் ஆசியான் பிராந்திய மன்றம் ஆகிய கூட்டங்களின் பக்க சந்திப்பாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
#SriLankanews
Leave a comment