இந்தியாவிடம் இருந்து எரிபொருளைப் பெறுவதன் மூலம் மின்சாரத் துண்டிப்புக்கு தீர்வு கிடைக்குமென மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
எரிபொருளை எப்படியாவது பெறவேண்டுமென்ற முனைப்பில் இருக்கும் இலங்கையானது, இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்திடம் இருந்தாவது எதிர்வரும் நாட்களுக்கான எரிபொருளைப் பெறலாம் என்று சிந்திக்கிறது.
இவ்விடயம் குறித்து கலந்துரையாடல்களை நடாத்துமாறு இலங்கை மின்சார சபையின் தலைவருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும், தேவையேற்டின் இந்த கலந்துரையாடலில் பங்கேற்பதற்கு தாம் தயாராகவுள்ளதாகவும் மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்
#SrilankaNews
Leave a comment