24 662f2bc4600ea
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உயரமான நபர் இவர் தானாம்

Share

இலங்கையில் உயரமான நபர் இவர் தானாம்

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அவர் தான் இலங்கையின் மிக உயரமான நபர் என தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுக்குடியிருப்பு – கைவேலியில் வசிக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) முன்னாள் போராளியான குணசிங்கம் கசேந்திரன் என்பவரே இவ்வாறு கூறியுள்ளார்.

அதன்படி ஏழு அடி இரண்டு அங்குல உயரம் கொண்ட இவர், தனது அசாதாரண உயரத்தால் எண்ணற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடுவதாக கூறிவருகிறார்.

இலங்கையில் எங்கும் தனது கால்களின் நீளத்திற்கு ஏற்ற பாதணிகளை காணமுடியவில்லை எனவும், அவற்றை வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான கசேந்திரன், பேருந்தில் இருக்கை கிடைக்காத வரையில் பயணிக்க முடியாது என்றும், நீண்ட தூர பேருந்தில் பயணித்தால் இருக்கைக்கு முன்பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் கூறுகிறார்.

முச்சக்கர வண்டி ஓட்டுநராக தொழில் புரியும் கசேந்திரன் கழுத்தை வளைத்துக்கொண்டு வாகனத்தை ஓட்ட வேண்டிய நிலைக்கு உள்ளாவதாகவும் அதனால் மிகவும் சிரமமடைவதாகவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
1768805068 4160 large
செய்திகள்உலகம்

செல்வந்தர்களின் சாம்ராஜ்யம்: 18.3 டிரில்லியன் டொலராக உயர்ந்த கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு!

உலகில் ஒருபுறம் பசியும் வறுமையும் அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு முன்னெப்போதும்...

1768957916 Prime Minister Harini Amarasuriya President and Chairperson of Board of Directors of Asian Development Bank ADB Masato Kanda Davos Switzerland Sri Lanka 6
செய்திகள்இலங்கை

பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலானது அல்ல; அது ஒரு திட்டமிட்ட அதிகாரப் படிநிலை – டாவோஸில் பிரதமர் ஹரிணி அதிரடி!

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் 56-வது உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum)...

Australia
செய்திகள்உலகம்

அவுஸ்திரேலியாவில் பயங்கரம்: துப்பாக்கிச்சூட்டில் இரு பெண்கள் உட்பட மூவர் படுகொலை!

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாகாணத்தில் உள்ள லேக் கார்ஜெலிகோ (Lake Cargelligo) பகுதியில்...

செய்திகள்உலகம்

கேமரா வேண்டாமே! உங்களைப் போன்றே பேசும் AI உருவம்: யூடியூப்பின் அதிரடி மாற்றங்கள்!

யூடியூப் நிறுவனம் தனது தளத்தில் செயற்கை நுண்ணறிவை (AI) இன்னும் ஆழமாகப் புகுத்தத் திட்டமிட்டுள்ளது. இது...