24 662f666df3eca
உலகம்செய்திகள்

கனேடிய மாணவர்களுக்கான புதிய கட்டுப்பாடுகள்

Share

கனேடிய மாணவர்களுக்கான புதிய கட்டுப்பாடுகள்

கனடாவிலுள்ள ஒன்ராறியோ மாகாணத்தில் மாணவர்கள் பாடசாலைகளில் தொலைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்வி ஆண்டு முதல் இந்த விதிகள் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதுடன் பாடசாலை வளாகத்தில் e-cigarette பயன்பாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் மழலையர் பள்ளி முதல் தரம் 6 வரை உள்ள மாணவர்கள் தங்கள் தொலைபேசிகளை (Silent mode)ல் வைத்திருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். மேலும், ஆசிரியர்களின் அனுமதி இல்லாமல் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், தரம் 7 முதல் 12 வரையிலான மாணவர்கள் தங்கள் தொலைபேசிபேசிகளை வகுப்பு வேளைகளில் மட்டும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகளை மீறும் மாணவர்களிடம் இருந்து தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்படுவதுடன், பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், பாடசாலையில் பயன்படுத்தப்படும் இணையத்தில் இனி சமூக ஊடகங்கள் அனைத்தும் நீக்கப்படும். அத்துடன் புகைப்படங்கள் அல்லது காணொளிகளை மாணவர்கள் பதிவு செய்வதும் உரிய அனுமதியின்றி அதை பகிர்வதும் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இதை எவ்வாறு கண்காணிப்பார்கள் அல்லது கட்டுப்படுத்துவார்கள் என்பது தொடர்பில் விளக்கப்படவில்லை. செப்டெம்பர் முதல் மாணவர்கள் பாடசாலை வளாகத்தில் e-cigarette பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியர்களால் கண்டெடுக்கப்பட்டால் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

மட்டுமின்றி, ஒன்ராறியோ அரசாங்கம் சார்பில், மாணவர்களின் e-cigarette பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் சுமார் 30 மில்லியன் டொலர் செலவில் பாடசாலைகளில் வேப் டிடெக்டர்கள் மற்றும் பிற பாதுகாப்பு மேம்படுத்தல்களை நிறுவ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...