tamilni 87 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்த அநுர

Share

ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்த அநுர

அடுத்த வருடம் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் இல்லையேல் மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்குவார்கள் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க்கில் இடம்பெற்ற புலம்பெயர்ந்த இலங்கையர்களுடனான சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல்களை அரசாங்கம் ஒத்திவைத்துள்ளது. எனினும் மக்களின் நிறைவேற்று அதிகாரத்தை மக்களால் நியமிக்கப்படும் ஜனாதிபதியே பயன்படுத்த வேண்டுமென அரசியலமைப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபையின் நிர்வாகத்தை ஆணையாளரின் கீழும் மாகாண சபைகளை ஆளுநர் நிர்வாகத்தின் கீழும் கொண்டு வர முடியும்.

எனினும் மக்களின் நிறைவேற்று அதிகாரத்தை மக்களால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதியே அதனை மேற்கொள்ள முடியும்.

எனவே ஜனாதிபதி தேர்தலை அடுத்த வரும் ஒக்டோபர் 17ஆ;ம் திகதிக்கு முன்னர் நடத்த வேண்டும். தேர்தல் நடத்தப்படாது என்ற சமிக்ஞை கிடைத்தால், மக்கள் வீதியில் இறங்குவார்கள் என்று அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...